கிறிஸ்துவின் ஜீவனே
kiristhuvin jeevanae
1. கிறிஸ்துவின் ஜீவனே ஜீவனின் பெலனே நித்தம் நீருறுப்போல் அற்புத ஜீவியம் ஆதரைதனில் மிகும் பேரிளைப்பாறுதலை ஆத்துமந்தனிலீயும் உன்னத பெலனே
ஜீவன் வாழ்வேன் ஜீவன் ஆளுவான் ஜீவன் ஜோதியில் வீற்றிடுவேன்
2. மரணத்தின் பொழுதை மாய்த்திடும் திறந்தே கரங்களில் அளித்தார் கிருபையின் செயலாலே தருணமே தருபவர் தக்கதோர் பெலன்தனை தரணியில் தரித்துமே ஜீவனடைவேனே - ஜீவ
3. மெழுகு போல் உருகிய என் பெலனழிகையில் கழுகு புலவரிலே காத்தமர்ந்திடுவேனே அழிவில்லா ஜீவனின் செட்டைகளுயர்த்தியே அதி வல்லமையுடனே பறந்துயர்ந்திடுவேன் - ஜீவ
4. தளராது காலேபினைப் போலத் திரும்ப பெலன் வளர்ந்தே வாலவயதைப் போலத் திரும்பிடுதே முகந்தனின் பிரபையே அகந்தனின் சுகமிதே பகரும் பரிசுத்த ஆவியின் அருளே - ஜீவ
5. ஜோதிகளின் பிதாவின் பொன்முகம் நின்றிலங்கும் சீயோனின் இன்பக்கதிர் நேயர் ஜீவனல்லோ நித்தியமிலங்குதே மெத்ததோர் ஜீவனாலே சத்தியோர் கீதமென்றும் “கிறிஸ்துவின் பெலனே!" - ஜீவ