கிறிஸ்து இயேசு வருகின்றார்
kiristhu yesu varugindraar
1. கிறிஸ்து இயேசு வருகின்றார் எக்காள சத்தம் வானில் தொனிக்க ஆவலாய் நோக்கும் மீட்கப்பட்டோரை ஆகாயம் மீதில் கூட்டிச் சேர்ப்பார்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் இயேசு ராஜன் வேகம் வருகிறார்
2. திருடன் போல வந்திடுவார் மின்னலைப் போன்று மா பேரொளியில் மத்திய வானில் விண் சேனையோடே சுத்தர்கள் ஒன்றாய் பாடி மகிழ்வோம்
3. இமைப்பொழுதில் சித்தர்களும் இயேசுவொடோன்றாய் மறைந்தே போவார் தீவிரமாய் நாம் விழித்திருப்போம் ! தேவனுடனே சேர்ந்து களிப்போம்
4. நாட்கள் இனியும் சென்றிடாதே நினையாத நேரம் கர்த்தர் வருவார் விழிப்புடன் நாம் ஜெபித்திருப்போம் ஆர்ப்பரிப்புடன் அவரை சந்திப்பேன்
5. மணி சாயல் நீங்கி மாறிடுவோம் விண் சாயல் நாம் பெற்று மகிழ்வோம் அழிவற்றோராய் அவரோடென்றும் ஆனந்தமாக வாழ்ந்து களிப்போம்