கிறிஸ்து ராஜா வாக்குதத்தத்தின் பேரில்
kiristhu raajaa vaakkudhathathin peril
1. கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில் தொனியின் சத்தம் தொனிக்கும் என்றுமே, ராஜனுக்குக் கனம் புகழ் ஓங்குக, நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்
நிற்பேன் நிற்பேன், தேவ வாக்குத்தத்தங்களை நம்பியே நான் நிற்பேன் நிற்பேன், நான் நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.
2. சந்தேகப் புயல் வீசிய போதிலும், கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில், தேவ ஜீவ வார்த்தைகளினால் வாழ்வேன், நிலைநிற்பேன் வாக்குத்தத்தத்தில்.
3. அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால், பரிபூர்ண விடுதலையைக் கண்டேன், நான் காணும் அந்நல் வாக்குத்தத்தங்களை, நம்பி நிலை நிற்பேன் என்றுமே.
4. மீட்பர் யேசுவின் நல் வாக்குத்தத்தத்தில், அவர் அன்பு பெலத்தில் நிலை நிற்பேன், ஆவியின் பட்டயத்தால் மேற்கொள்ளுவேன், நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.
5. வாக்குத்தத்தங்களினால் விழ மாட்டேன் தூய ஆவியின் அழைப்பை நான் ஏற்பேன் வல்ல மீட்பர் எனக்கு ஓய்வு ஈவார் நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.