கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
kiristhesu uyirthezhundhaar
கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் மரித்தோரில் முதற் பலனாகிய பாதாளம் நடுங்கிட வேதாளம் ஒடுங்கிட ஆதவன் ஜெயித்தெழுந்தார்
1. மரணமதின் முள்ளினை முறித்தார் தம் மரணத்தால் அறவே அகற்ற வே அடிமையின் நுகந்தனை வெற்றி வேந்தர் எழுந்தார் - கிறிஸ்தேசு
2. எழுந்த இயேசு ராஜனே - அழிவை காண்பதில்லை வீழ்ந்தோர் வழுவாது நிறுத்த தம் முன்னிலை ஆழ்ந்த அன்பு உடையவர் - கிறிஸ்தேசு
3. மா பரிசுத்த ஆவியால் - மரித்தோரினின்றெழுந்தார் நேசமுள்ள சரீரம் சபையதின் சிரசாக ஆசித்தே வென்றெழுந்தார் - கிறிஸ்தேசு
4. யாவையும் தமது திரு - பாதங்கட்கு கீழ்ப்படுத்தும் ஆவியின் செயலாலே அழிவினை அழிப்பவர் சாவை நீக்கும் மருந்தே - கிறிஸ்தேசு
5, ஜீவனின் அதிபதியே சபையின் அரும் சிரசாய் ஜோதியாய் நடந்தவர் அதன் இடைதனிலென்றும் கேதம் போக்க எழுந்தார் - கிறிஸ்தேசு
6. ஆவியும் மணவாட்டி யும் - வாரும் கர்த்தாவே எனவே ஆதரைதனில் அவர் வரும் வேளை நெருங்காதே ஆமென் வாரும் என் பீரோ - கிறிஸ்தேசு