கிறிஸ்தவ நேசத்தில் நாம் ஐக்கிய மனதால்
kiristhava nesathil naam aikkiya manadhaal
1. க்றிஸ்தவ நேசத்தில் நாம் ஐக்கிய மனதால் இந்த மனங்க ளொற்றுமை சீர் பொருந்தட்டுமே.
2. நம் பிதா சன்னிதி நாம் ஜெபம் செய்கிறோம் பயம் ஆசை நோக்கம் ஒன்றாம் சுகம் அலுவலும்.
3. நம் துக்கப் பாரங்கள் அன்னியோன்னியமாய்க் கண்ணீருடன் வசிக்கின்றோம் நாம் சகதாபமாய்.
4. நாம் பிரியும்போது நமக்குத் துக்கமாம் ஆனாலும் மனம் யோசிப்பாய் சேர்வதை நம்புவோம்.