கிறிஸ்மஸ் வருது தருது
kirismas varudhu tharudhu
கிறிஸ்மஸ் வருது தருது தருது தருது தருது நன்மைகள் தருது கிறிஸ்மஸ் வருது நன்மைகள் தருது (குழந்தைகள் நெஞ்சங்கள் கொண்டாட்டம் போட பெற்றோர் நெஞ்சங்கள் திகைபினில் ஆட -2 வருது வருது கிறிஸ்மஸ் வருது தருது தருது நன்மைகள் தருது
1. உற்றார் உறவினர் ஒன்றாக கூட சொந்த-பந்தங்கள் உறவாடி மகிழ சின்னஞ்சிறு வாண்டுகள் தப்பாட்டம் போட வாலிப வனங்கள் கொண்டாட்டம் ஆக வந்தனம் வந்தனம் கிறிஸ்மஸ் தினமே அது தந்தனம் தந்தனம் மகிழ்ச்சியின் வனமே இயேசுராஜாவை உற்சாகமாய் வந்தது இனிய கிறிஸ்மஸ் நாளே
2. மந்தை மேய்ப்பர் போற்றிய மரி மகனே சிந்தனை கவர்ந்த எங்கள் நல் வேந்தனே கந்தைத் துணியில் சுற்றிய பாலகன் இன்றைய உலகில் தோன்றிய வித்தகன் வந்தது வந்தது கிறிஸ்மஸ் தினமே அது தந்தது தந்தது மகிழ்ச்சியின் வனமே இயேசுராஜாவை உற்சாகமாய் வந்தது இனிய கிறிஸ்மஸ் நாளே