கிறிஸ்மஸ் கொண்டாடும்
kirismas kondaadum
கிறிஸ்மஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களே இனி காலம் செல்லாது சிந்தை செய்யுங்களேன் அவர் வந்து ஈராயிரம் வருடம் போனதே அவரது நியாயதீர்ப்பு வரவிருக்கிறதே
பல்லவி
மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு
செல்வமதைத் தேடும் உயர் செல்வாக்கை நாடும் இவ்வுலக சம்மந்தம் வேண்டாம் தோழா பொருளாசைக் கொண்டு வீண் பெருமையிலே வீழும் பரிதாப பேயின் வழி வேண்டாம் தோழி பெற்றோரே பெரியோரே நான் சொல்லுவத கவனியுங்க நீங்க படிக்கும் வேதத்தின் வழியில் குடும்பமாக வாழணுங்க வேதம் சொல்லிடா வாழ்க்கை பொய்யடா தேவ சித்தமே நம் வாழ்வின் மெய்யடா புரிந்து செயல்படுவோம் பக்குவமா தப்பி செல்லுவோம்
பல்லவி
மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு
ஏற்ற தாழ்வு பார்க்கும் வீண் வேற்றுமைகள் வேண்டாம் சாதி பேதம் பார்பதிலே தெய்வம் இல்லை அன்பு ஒன்றே வேண்டும் இது கிறிஸ்துவின் உபதேசம் சாதி சமயம் கடந்து சென்று சேர்வோம் பரதேசம் சபையே தேவ ஜனமே சுதாரித்து செயல்படுங்க நமது வாழ்வின் செயலிலெல்லாம் தேவ நாமம் உயரணுங்க ஏற்ற தாழ்வெல்லாம் கிறிஸ்துவேயில்ல உலக வழியெல்லாம் திருசபைக்கு அழகல்ல உணர்ந்து தீர்மானிப்போம் தேவனுக்கே மகிமை செய்வோம்
பல்லவி
மனந்திரும்பு மனந்திரும்பு உன் கொண்டாட்டம் விடு மகிமைமேல மகிமையடைய மறுரூபம் நாடு