கெட்டோனை ரட்சியும் சாவோனை காரும்
kettonai ratsiyum saavonai kaarum
1. கெட்டோனை ரட்சியும் சாவோனை காரும் பாவமும் சாபமும் நீங்கச் செய்யும் சோர்வோனைத் தாங்கிடும் வீழ்ந்தோனைத் தூக்கும் சுப விசேஷத்தை அறிவியும்.
கெட்டோனை ரட்சியும் சாவோனைக் காரும் யேசு தயாபரர் யேசு வல்லோர்.
2. பாவ சண்டாளரைப் பொறுமையோடு திருத்தி ரட்சிக்கப் பார்க்கிறாரே. மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடு வந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே.
3. தீக்குண நெஞ்சிலும் மங்கிப் போனாலும் பாக்யத்தை நாடும் நல்லாசை உண்டாம். ஆன்பின் விசேஷத்தால் சத்தியத்தாலும் குன்றிய வாஞ்சையும் மேலிடுமாம்.
4. கெட்டோனை ரட்சியும் ஆத்திரத்தோடு! ஆவியின் வல்லமை அருளுவார். ரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு தேவாசீர்வாதமும் தந்திடுவார்.