கேட்போர் யாரென்றாலும் சொல் சொல் செய்தி
ketpor yaarendraalum sol sol seydhi
1. கேட்போர் யாரென்றாலும் சொல் சொல் செய்தி திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு எந்தத் தேசத்தார்க்கும் அதைப் பரப்பு யாரென்றாலும் சேரலாம்.
யாவன் என்றாலும் யாவன் என்றாலும் என்றும் இந்தச் செய்தி எங்கும் கூறலாம் பாவி வா பிதா அன்பாய் அழைக்கவும் யாரென்றாலும் சேரலாம்.
2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்? வா திறந்தார் வாசல்! உட்செல்லாததேன்? ஜீவ பாதை ஒன்றே யேசுதான் - வாவேன் யாரென்றாலும் சேரலாம்.
3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம் யாரென்றாலும் இவ்வாக் கென்றும் நிற்குமாம் யாரென்றாலும் நித்ய ஜீவன் காணலாம் யாரென்றாலும் சேரலாம்.