கேரித் ஆற்றுநீர்
kerith aatruneer
கேரித் ஆற்றுநீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் பானையில் மா எண்ணை குறைந்திட்டாலும் கர்த்தன் இயேசு நமக்கு உண்டு
கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு தூதர் உண்டு அவர் சமூகம் உண்டு
உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு என்றும் பெரியவரே நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் செய்திடுவார்
இல்லை என்ற நிலை வந்ததோ இருப்பது போல் அழைக்கும் தேவன் பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ சுற்றத்தார் உன்னில் பகையானாரோ அழைத்தவர் உனக்குள்ளே இருக்கின்றார் பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே