கெம்பீர சத்தம் வானில்
kembeera satham vaanil
1. கெம்பீர சத்தம் வானில் முழங்க ஏகிடுவோமே நாம் துயருடன் இக்காலப் பாடுகள் யாவும் ஒழிந்துமே எக்காலம் விண்ணிலே மகிழ்ந்திடுவோம்
அன்பராம் இயேசுவை கொண்டாடுவோம்! அல்லேலூயா கீதம் முழங்கிடுவோம் வானவர் சாயலை என்றும் தரித்துமே வான்தனில் மகிமையில் ஜொலித்திடுவோம்
2,. இகத்தின் மேன்மையை தூசியாய்த் துறந்தே அகத்தில் கிறிஸ்துவைத் தரித்திடுவோம் தேகத்தில் பாடுகள் நித்தம் சகித்துமே மகிமை அணிந்தே சோபிப்போமே - அன்ப
3. இம் மண்ணில் சோதனை நிந்தையை ஜெயித்தே இயேசுவின் அடிகள் தொடர்ந்திடுவோம் கண்ணீரில் விதைத்த நாம் கெம்பீரத்தோடறுக்க இன்புறும் விண்புரி பறந்திடுவோம் - அன்ப
4. தேவனின் ஆவியால் நடத்தப்பட்டோராய் தேவனின் சுதராய் வளர்த்திடுவோம் தேவனின் சித்தம் தேகத்தில் செய்துமே தேவனின் ராஜ்யத்தில் பிரவேசிப்போம் - அன்ப
5. சீயோனும் சாலேமாய் ஏக சரீரமாய் சிரசாம் இயேசுவில் நிறைவடைவோம் சிங்காசனம் வென்று ஆளுகை செய்திட சீயோனின் ராஜாவை சந்திப்போமே - அன்ப