கேள் யேசு அழைக்கும் சத்தம்
kel yesu azhaikkum satham
1. கேள் யேசு அழைக்கும் சத்தம் யார் போய் என் வேலை செய்வார்? முதிர்ந்த பயிர் அறுத்து அரிகள் யார் சுமப்பார்? கூவி அழைக்கும் ஆண்டவர் உன்னத பலம் ரூடவ்வார் இதோ நான் தேவா அனுப்பும் பதில் யார் சொல்வார் நன்று.
2. தூது கேளோர் நாடு தேடி கடல் தாண்டா விட்டாலும் வீட்டருகில் உன் பக்கத்தில் தூது சொல்லி உதவு தூதர் பவுல் போல் போதிக்க ஆற்றல் இல்லாவிட்டாலும் யேசு மாண்டார் உனக்கென்று நேசர் அன்பு கூறலாம்.
3. மக்கள் சாகின்றார்கள் உன்னை ஆண்டவர் அழைக்கிறார் என்னால் ஆகாதொன்றும் செய்ய மக்கள் கேட்க சொல்லாதே தரும் வேலை செய் களிப்பாய் ஊழியமே உன் வாழ்வு அழைத்தால் பதில் சொல் உடன் தேவா இதோ அனுப்பும்.