கேள் அலைகள் மேல் தொனிக்கும்
kel alaigal mel thonikkum
1. கேள் அலைகள் மேல் தொனிக்கும் சத்தமே விண் சுடர் வீசிடும் ஆத்துமாக்கள் ரட்சை பெற வேண்டுமே விண் சுடர் வீசிடும்.
அருள் சுவிசேஷ விண்சுடர் சர்வலோகம் வீசிடும் சத்ய சுவிசேஷ விண்சுடர் சதா காலம் வீசிடும்.
2. நானா ஜாதி என்றழைக்கும் சத்தமே விண் சுடர் வீசிடும் ஆத்துமாக்கள் க்ருசின் முன் படைக்கவே விண் சுடர் வீசிடும்.
3. சர்வ மாந்தர் கிருபை பெருகவும் விண் சுடர் வீசிடும். க்றிஸ்துவின் ஆவி உள்ளங்களில் தங்கவும் விண் சுடர் வீசிடும்.