கீலேயாத்தின் பிசின்
keeleyaathin pisin
கீலேயாத்தின் பிசின் தைலமே என்னை சுகப் படுத்திடுமே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே என் மேல் வாசனை வீசிடுமே
பிசின் தைலமே லீலி புஷ்பமே என் இயேசுவே வந்திடுமே
2. சாரோனின் ரோஜாவே என்னை கவர்ந்து கொள்ளுமே யூத ராஜ சிங்கமே என்னை ஆளுகை செய்திடுமே
ரோஜாவே இயேசு ராஜாவே மகிமையிலே வந்திடுமே
3.கல்வாரி நாயகனே என் பாவங்களை மன்னியுமே சீயோன் மணவாளனே என்னை அழைத்து செல்லுமே
நாயகனே மணவாளனே சீக்கிரமே வந்திடுமே