கேடகம் நீர் தானே
kedagam neer thaanae
கேடகம் நீர் தானே பெலனும் நீர் தானே - 2 துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே - 2
கேடகமே அடைக்கலமே நான் நம்பும் கன்மலையே - 2 நான் நம்பும் கன்மலையே -கேடகம்
1.கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்தேவனே - 2 ஏற்ற காலத்தில் கண்ணீருக்கு பதில் தந்து காப்பவரே - 2 - கேடகமே
2.கூப்பிடும் போது மறு உத்தரவு கொடுத்திடும் நல் தேவனே - 2 ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீரே - 2 - கேடகமே
3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே - 2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே - 2 - கேடகமே