கவலை கவலை இல்லையே
kavalai kavalai illaiyae
கவலை கவலை இல்லையே என் இயேசு என்னோடு இருப்பதால் – 2 அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர் என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர் – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் - 3
1. அலைகள் மோதினாலும் நான் பயப்பட மாட்டேன் என் படகினில் இருப்பவர் மிகவும் பெரியவர் – 2 அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – 2 அவரின் வார்த்தைக்கு சகலமும் கீழ்ப்படிந்திடுமே – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் செயல்களிலே மிகவும் பெரியவர் – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2
2. இடறி விழுந்த நேரம் என்னை கரம்பிடித்தெடுத்தார் - நான் உயிர் தருகின்ற ஜீவ வார்த்தை எனக்கு போதித்தார். – 2 அவர் தருகின்ற ஜீவ தண்ணீரால் – 2 எனக்குள்ளே ஜீவ நதிகள் பாய்ந்து ஓடுதே – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் அவர் இரட்சிக்கின்ற மீட்பரானவர் – 2. என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2.
3. இந்த உலகம் கைவிட்டாலும் எனக்கு கலக்கம் இல்லையே என் ஆத்ம நண்பர் இயேசு எனக்கு எப்போதும் உண்டு – 2 கிறிஸ்து எனக்குள்ளே வாசம் செய்பவர் – 2 அவர் அன்பை விட்டு என்னால் பிரிய கூடுமோ – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் தன் ஜீவனையே எனக்கு தந்தவர் – 2 என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2