கருவரையில் எனை அழைத்தது
karuvaraiyil enai azhaithadhu
கருவரையில் எனை அழைத்தது நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா -2 என்னை உள்ளங்கையில் வரைந்து ஒரு தகப்பனைப்போல் சுமந்து -2 என்னை மார்பினிலே அனைத்ததை என்ன சொல்லுவேன் -2
தகப்பனே ஆராதனை என் மீட்பரே ஆராதனை-2
வியாதியின் நேரத்தில் துணையாய் இருந்தீர் மரணத்தின் படுக்கையில் விடுதலை கொடுத்தீர் -2 கண்ணீரோடு அழுத வேளையில் கரம்பிடித்து துணையாய் நின்றீர் -2 என் கரம்பிடித்து துணையாய் நின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் சுகம் தந்து இதுவரையும் என்னை தாங்கினீர் -2 தாயைப்போல என்னை தேற்றினீர் ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர் -2 ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர்
வழியும் சத்தியமும் ஜீவனுமானீர் காலமெல்லாம் எனக்கு புது பெலனானீர் -2 எனக்காக இரத்தம் சிந்தினீர் உந்தன் மகனாய் என்னை மாற்றினீர் -2 எந்தனுக்காய் உம்மையே தந்தீர்
அன்பினை தந்து எனக்கு அடைகலமானீர் ஆதரவாக எந்தன் அருகினில் நின்றீர் -2 பாரத்தாலே சோர்ந்த வேளையில் பாரம் நீங்கி என்னை காத்தீர் -2 (நான்) பாரம் நீங்கி என்னை காத்தீர்