கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
karuthillaamal vaazhgindren
கருத்தில்லாமல் வாழ்கின்றேன் கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட உதவி செய்யும் தேவா! - எனக்கு உணர்வு தாரும் தேவா
உள்ளத்தில் மாற்றம் தேவை - எனக்கு வெளி வேஷம் என்றும் வேண்டாம் மறுரூப வாழ்வைத் தந்து என்னை குணவானாய் மாற்றிவிடும்
கல்வரிக் காட்சி கண்டேன் - அந்த காயங்கள் என்னால் என்றேன் அன்பின் ஆழம் கண்டு - அந்த அன்புக்கு அடிமை என்றேன்
கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு ஜெபத்தின் ஆவி தாரும் கிருபையின் காலம் இப்போதும்
இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்