கருணையின் தேவா
karunaiyin devaa
கருணையின் தேவா! சுத்தி தாரும் மூவா! கர்த்தர்! உமக்கு ஸ்தோத்திரம்
பரலோகமே - பவ நாசனே பரனே - கரனே - உனை கண்டு மகிழ்ந்திடவே எமக்காசை கருணா நிதியே காத்திடுவாய்- கரு
வல்லமை ஞானம் நீதி நிறைந்த வள்ளலே உமக்கே ஸ்தோத்திரம் வரந்தாரும் - வந்து காருமே வந்தோம் - தந்தோம் - உந்தன் சுந்தர கரத்தினில் மைந்தர்களெமையே வருவாய் - தருவாய் அருள் மாரி இப்போ - கரு
பலியாக உமையே பாவிக்காய் ஈந்த பரனே உமக்கே ஸ்தோத்திரம் புறம்பானீரோ - புவி மீதிலே புகழ்வேன் - மகிழ்வேன் - உந்தன் பொற்பாதம் பணிந்து மே ஆனந்த களிப்புடன் பொல்லா உலகில் இன்பத்தை வெறுத்து. - கரு
நித்ய மணாளா! நிர்மல நாதா! நேசரே உமக்கே ஸ்தோத்திரம் நினையாத நேரம் வருவீரைய்யா நாதம் - விழிப்பாய் - உமை சந்திக்க ஆயத்தமா இருந்திடவே நேசா ஜெபிக்க ஏவுதல் தாரும் - கரு