கருணைக் கடலாம்
karunaik kadalaam
கருணைக் கடலாம் இயேசுவே கனிவுடனே இப்போ இரங்கிடுமே - எங்கள் கருணைக் கடலாம் இயேசுவே
வாரும் வல்லமையாய் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விசுவாசத்தை புகழ்ந்திடவே திருநாமத்தை எங்கள்
தாரகமற்ற தரணியோரை தாமதமின்றி மீட்டிட எழுந்திடுமே இந்நேரமே - எங்கள்
அப்போஸ்தல காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்கிட - எங்கள்
முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர் கூனரும் சுகமடைந்து உம்மைப் பாடிட எங்கள்
கறைகளின்றி கற்பில் சிறந்து மன்னன் தோன்றும் வேளையில் பறந்திடவே சபை மேகத்தில் - எங்கள்
தயாகரமே தஞ்சம் நீரே தியாகமே மேன்மையான தாசரே அபிஷேகித்து உபயோகியும் - எங்கள்