கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடக்கும்
kartharukku payandhu avar vazhi nadakkum
கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடக்கும் கர்த்தரின் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை
உன் கைகளின் பிரயாசத்தை நீ தினமும் சாப்பிடுவாய் பாக்கியம் நன்மையும் உண்டாயிருக்கும் சிலாக்கியம் தந்திடுவார்
குடும்பத்தின் தலைவியவள் நல்ல கனிதரும் கொடியாவாள் பிள்ளைகள் பந்தியை சுற்றிலும் ஒலிவ மரங்களாயிருப்பார்கள்
சியோனிலிருந்து உன்னை - கர்த்தர் என்றென்றும் வாழ வைப்பார் கர்த்தரின் ஆசீர்வாதத்தை என்றும் கண்டு நீ அதிசயிப்பாய்
கர்த்தரின் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாகும் இஸ்ரவேலை வாழ்விக்கும் தேவன் சமாதான பிரபு ஆவார்