கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு
kartharukku nam pudhuppaattu
கர்த்தருக்கு நம் புதுப்பாட்டு துதியுடன்றெடுப்போம் ஆவிக்குள்ளாய் பாடி மகிழ்வோம் இயேசுவைக் கொண்டாடிடுவோம்
நாமெல்லாரும் ஒன்றுகூடி இயேசுவை கொண்டாடிடுவோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்கென்றும் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்
பரமானந்த நற்செய்தி வானில் பரலோக தூதர் கூறினர் நம் இயேசு பிறந்தார் பெத்லகேமில் நமக்கும் இரட்சிப்பு வந்ததே
பரன் இயேசுவின் சத்தியமார்க்கம் புனித புது வழியே மெய்பூரண சத்தியம் பறைசாற்றி மகிமை ஊழியம் செய்குவோம்
இன்ப இயேசுவே வாரும் விரைந்தே இது நம் இறுதி ஜெபமே நம் இயேசுவின் பொன் முகம் வேகம் காண்போம் நடுவானில் வந்திறங்குவார்