கர்த்தரின் வழியில் கருத்தோடு
kartharin vazhiyil karuthodu
கர்த்தரின் வழியில் கருத்தோடு நடந்தால் (2) சம்பூர்ண சந்தோஷமே - அல்லேலூயா உந்தனின் வார்த்தை என் கால்களின் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமே - அல்லேலூயா இடறல்கள் எனக்கில்லையே
முன் பக்கம் சவுலின் சேனைகள் நெருக்க மறுபக்கம் மாகோன் வனத்தினில் தவித்தேன் வழியின்றி கலங்கி நின்றேன் ஏழை என் ஜெபத்தை யேகோவா நீர் கேட்டீர் (2) பெலிஸ்தரை எழும்பபண்ணி - அல்லேலூயா சவுலையே கலங்கடித்தீர்
அழுகையின் பள்ளத்தாக்கினில் நடந்தேன் அழுதிட பெலனும் இல்லாமல் அழுதேன் தோழரும் எதிர்த்தனரே உமக்குள்ளே பெலனை பெற்றிட செய்தீர் (2) உம் வாக்கை நல்கினீரே - அல்லேலுாயா ஆ என்ன பேரின்பமே (2)
பாசானின் தேச காளைகள் எதிர்க்க பந்த பாசங்களும் பரியாசம் செய்ய பல நேரம் பதறி நின்றேன் நான் நம்பும் தேவன் இன்னாரென்றறிந்தேன் (2) கர்த்தர் என் பட்சமுமே - அல்லேலூயா மானிடன் என்ன செய்வான் (2)
கர்த்தரின் ஆவி எவ்விடம் உண்டோ விடுதலை ஜெயமும் அவ்விடம் உண்டே சாத்தானின் நுகமும் எங்கே அபிஷேகம் நுகத்தை முறித்திட செய்தீர் (2) மீட்டிடும் நாளுக்கென்றே - அல்லேலூயா முத்திரை உம் ஆவியே (2)
ஆதியின் வார்த்தை மாமிசமாகி கிருபை சத்தியமும் நிறைந்தவராகி நமக்குள்ளே வாசம் செய்தார் ஏற்போர்கள் யாரும் இயேசுவின் சுதராய் (2) புத்திர சுவிகாரமாய் - அல்லேலூயா புது ஆவி எனக்களித்தார் (2)