கர்த்தரின் வசனத்தைக் கருத்துடன்
kartharin vasanathaik karuthudan
கர்த்தரின் வசனத்தைக் கருத்துடன் ஆராய்வோம் நித்திய ஜீவனுண்டே கர்த்தரை அறிவிக்கிறதே
குற்றங் குறைகளற்ற வசனம் - அது ஆத்துமத்தை உயிர்ப்பிக்கும் சத்திய வேதம் சத்தியமாகும் புத்தியில்லா பேதையோனை ஞானியாக்கிடும்
வானமும் பூமியும் அழியும் - அவை களிலுள்ள யாவுமே ஒழியும் வானவர் வேதம் அதிலொரு உறுப்பும் அழியவே அழியாது அன்பர்க்கு உணவாகும்
பாவத்தின் சாபத்தை தீர்த்தார் - இயேசு பாரக் குருசினிலே மரித்தார் பாவியை மீட்டார். பரிந்து பேசுகிறார் ஆவி விசுவாசிக்கும் அன்பர்க் கெனவுரைக்கும்
வேகமாய் மேகத்தில் வருவார் - நம்மை விருப்பமாய் அவரிடம் சேர்ப்பார். வேதனை தீர்ப்பார். வியாகுலம் தவிர்ப்பார் விண்ணில் நித்தியகாலம் கண்ணின் மணிபோல் காப்பார்
இருதயப் பலகையில் எழுதி - அதை ஒருகணம் மறையாமல் கருதி இருந்திடும் போதும் எழுந்திடும் போதும் எப்போதும் எப்போதும் எண்ணி எண்ணிக் கருத்தாய்
புத்திரர்க்கும் படித்துக் கொடுத்து - அதைக் காத்து நடக்கக் கற்றுக் கொடுத்து காலை மாலை வேளை தவறா தாத்துமப் பசிக் கெனப் புசித்து வசித்திட