கர்த்தரின் பல நன்மைகளை
kartharin pala nanmaigalai
கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
நடந்து வந்த வழிகளெல்லாம் நலலவரின் கரம் சுமந்ததுவே ஆறுதல் ஆதரவும் அளித்தாரே ஆபத்திலே உற்ற துணையவரே
வஞ்சகன் வீசின வலைகளிலே சிக்கிடாமலே பாதுகாத்தனரே தாயினும் மேலாக நேசித்தாரே தாரணியில் என் தஞ்சமும் அவரே
ஜெயமான பாதைகளில் செல்ல சேனை வீரராய் முன் செல்லுவாரே கண்ணை என் மீது வைத்திடுவாரே கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
தூயவரின் அன்பினிலே நாளும் வளர தூய ஜீவியத்திலும் முன்னேற தருவாரே தினமும் கிருபைகள் தயங்காது பாடு சகித்திடவே
மரண இருளில் நடந்தாலும் பரமன் என்னோடே இருப்பாரே பரத்திலே உண்டு பல வீடே சிகரத்தில் நிற்பேன் அவரோடே