கர்த்தரின் இதய துடிப்பு
kartharin idhaya thudippu
கர்த்தரின் இதய துடிப்பு நாமே கர்த்தர் நம் மேய்ப்பர் நாம் தாழ்ச்சியடையோம்
ரத்தத்தால் இணைக்கப்பட்டோம் சிலுவையால் உயர்த்தபட்டோம் இயேசுவின் அன்பு ஒருநாளும் மாறாததே - 2
சரீரம் முழுமையும் கிறிஸ்தேசுவே சபையின் தலைவரும் கிறிஸ்தேசுவே நம் வாழ்வின் ஜோதி அவரே இதயத்தின் தீபம் அவரே மானிடர் போற்றிடும் மகிமையும் அவரே
ஏ நிலா ஹே சேர்ந்து நாம் கொண்டாடிடுவோம் ஏ நிலா ஹே இயேசு ராஜன் நமக்காய் வந்தார் ஏ நிலா ஹே அன்பின் பாடல் பாடிடுவோம் ஏ நிலா ஹே உள்ளம் கவர்ந்தவர் இயேசு ராஜா
கிறிஸ்துவின் சபையும் நாம் தானே மணவாட்டி சபையும் நாம் தானே அன்பினில் பெருகிடுவோம் ஐக்கியமாய் வாழ்ந்திடுவோம் மகிமையின் ராஜன் சீக்கிரம் வந்திடுவார்