கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
kartharilum tham vallamaiyilum
கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையால் அனைவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம்
சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் சாத்தானின் சேனையை முறித்திடுவோம் - அவர் சத்துவ வல்லமையால்
மாமிசம் இரத்தத்துடனுமல்ல துரைத்தனம், அதிகாரம், அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு - சர்வாயுத
சத்தியமாம் கச்சையை கட்டியே நீதியின் மார்க்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் - சர்வாயுத
பொல்லாங்கன் எய்யும் அம்புகளை வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம் விசுவாசம் என்னும் கேடகம் மேலே வீரமுடன் பிடித்து நிற்போம் - சர்வாயுத
இரட்சண்யமாம் தலைச்சீராவும் எச்சனமும் அணிந்துகொள்வோம் தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம் தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் - சர்வாயுத
எந்தச் சமயத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் பரிசுத்தர்கட்காக ஆவியினால் மனஉறுதியுடன் ஜெபிப்போம் - சர்வாயுத
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal