கர்த்தரையே தெய்வமாக
kartharaiyae theyvamaaga
கர்த்தரையே தெய்வமாக கொண்டஜனமே கலங்காதே திகையாதே பாக்கியவான் நீயே
1.தடைகள் நீக்கும் இயேசுராஜா முன்னேசெல்கிறார் தடைகள் நீக்கி வாசல்களை திறந்து தந்திடுவார் தளர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே - 2 கர்த்தர் இயேசு உனக்காக யாவையும் செய்திடுவார்
2.இக்காலத்து பாடுகளெல்லாம் இனிமேல் வருகின்ற மகிமையின் வாழ்விற்கு என்றும் நிகரல்ல சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே - 2 நித்திய மகிழ்ச்சி தலையின் மேலே என்றும் தங்குமே
3.மகிமையின் ராஜா இயேசு கிறிஸ்து வானில் வருகின்றார் மணவாட்டியாம் உன்னை சேர்க்க விரைவில் வருகிறார் கண்ணீரெல்லாம் களிப்பாகுமே - 2 கஷ்டம் நஷ்டம் துன்பம் தொல்லை ஓடி மறைந்திடுமே
4.பரலோகமாம் இன்ப வீட்டில் என்றும் மகிழ்வுடனே பரமராஜன் இயேசுவுடன் என்றும் வாழ்ந்திருப்போம் கோடி கோடியாய் தூதருடன் - 2 பாடி ஆடி சொர்க்க நாட்டில் வாழ்ந்திருப்போம்