கர்த்தரைப் போற்றியே
kartharaip potriyae
கர்த்தரைப் போற்றியே வாழ்த்துது கனிந்துமே என் ஆத்துமா களிக்குதே என் ஆவி - கருணை கூர்ந்தனர் பரமாத்துமா .
இன்று தன்னடிமையின் தாழ்மையை இறையவர் கண்ணோக்கினார் என்றென்றும் எல்லோரும் புகழ என்னைத் தன்னியமாக்கினார்
இனமோ டாபிரகாமுக்கென்றைக்கும் இரக்கம் செய்யவே எண்ணினார் இஸ்ரவேலரை ஆதரித்தவர் இன்பாய் உய்யவே நண்ணினார்
பிதா குமாரன் சுத்த ஆவிக்கும் மகிமை யுண்டாவதாக சதா காலமும் என்றென்றைக்கும் மகிமை யுண்டாக ஆமென் அல்லேலூயா ஆமென் (2)