கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
kartharaip paadiyae potriduvomae
1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல கருணையோடிரக்கம் கரையில்லை அவரன்பு கரையற்றதே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப் போல் வேறு நேசரில்லையே
2. கொடுமையோர் சீறல் பெரு வெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேளைக்கு எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்
3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்
4. கல்லும் முள்ளுகள் உள்ள கடின பாதையிலே கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும் வல்லவர் இயேசு நம் முன்னே செல்கிறார்
5. சீயோனை சிறப்புடன் சேர்த்திட இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே முகமுகமாகவே காண்போமே அவரை யுகாயுகமாகவே வாழ்ந்திடுவோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm Am C D G Em Am C D7 G G C Am D7 G G Bm Am C D G Em Am C D7 G G Bm Am C D G Em Am C D7 G G Bm Am C D G Em Am C D7 G