கர்த்தரை உயர்த்திடும்
kartharai uyarthidum
கர்த்தரை உயர்த்திடும் காலம், இது நன்றியால் துதித்திடும் நேரம், தேவ வார்த்தையை நம்பிடும் யாரும், கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2)
1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர், தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2) கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர், கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை)
2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர், (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2) இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர், என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை)
3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை, எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2) அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க, ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)