கர்த்தரை துதியுங்கள்
kartharai thudhiyungal
கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - நம் தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது -(2)
துதிப்போம் நாம் துதிப்போம் அவர் கிருபை என்றுமுள்ளது -(2)
ஒருவராய் பெரிய அற்புதம் செய்பவரை துதிப்போம் ஞானமாய் பெரிய வானத்தை படைத்தவரை துதிப்போம் -(2)
பூமியின் கீழ் தண்ணீர் வைத்தவரை துதிப்போம் ஞானமாய் பெரிய வானத்தை படைத்தவரை துதிப்போம் -(2)
பகலை ஆள சூரியன் தந்த வரை துதிப்போம் இரவை ஆள சந்திரனைப் படைத்தவரை துதிப்போம்-(2)
இரதத்தையும் குதிரையையும் கடலில் கவிழ்த்தவரை துதிப்போம் சாத்தானின் மீது ஜெயத்தை தந்தவரை துதிப்போம் -(2)
வனாந்திரத்தில் காடையை கொடுத்தவரை துதிப்போம் கன்மலை பிளந்து தாகம் தீர்த்த வரை துதிப்போம் -(2)
தாழ்மையில் நம்மை தூக்கி எடுத்தவரை துதிப்போம் நெருக்கத்தில் நமக்கு விடுதலை தந்தவரை துதிப்போம் -(2)
பூமியின் மேலே ஆகாரம் தந்தவரை துதிப்போம் பரலோகத்தின் தேவன் அவர் என்று துதிப்போம் -(2)