கர்த்தரை துதித்து பாடிடுவோம்
kartharai thudhithu paadiduvom
கர்த்தரை துதித்து பாடிடுவோம் எக்காளத்தொணியோடே - நாம் அவர் நாமத்தை கீர்த்தனம் பண்ணிடுவோம் ஆனந்த சத்தத்துடன்
1. நான் நெருக்கப்படும் போதும் அவர் கிருபை என்னை தாங்கியதே (2) அவர் இரக்கம் மா பெரியதே என்னை காத்திட்ட நல்லவரே (2)
2. தாய் என்னை மறந்தாலும் கர்த்தர் மறவாது நினைத்தாலே (2) நிந்தை அவமானம் நேர்ந்த போதும் வந்தணைந்து என்னை தேற்றினார் (2)
3. இந்த உலகம் வெறுத்த போது அவர் பாசமாக தேடி வந்தார் (2) மாயையான இவ்வுலகம் வேண்டாம் ஆசை என் இயேசு போதும் (2)