கர்த்தரை நான் எக்காலமும்
kartharai naan ekkaalamum
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்திரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
1. கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும் கழித்து மேன்மை பாராட்டுவது ஒருமித்து நாம் உயர்ந்திடுவோம் கருத்தாய் அவர் நாமமே - கர்த்த
2. தூய பரண் முகம் நோக்கிடுவோர் சூரிய சோபையாய் மாற்றிடுவார் ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே சுகிக்க நல்லவரே - கர்த்த
3. ஜீவனை யீந்தார் தம் சாவினாலே வேதனை நீக்கினார் நோவினாலே அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே தற்பரன் மாற்றுகிறார் - கர்த்த
4. தேறி அப்போஸ்தல தூதுகளால் மாற்றிடுவார் அவர் ரூபாய் ஊற்றியவர் புது ஜீவன் எந்நாளும் ஏற்றுவார் ஜெயக் கொடியே - கர்த்த
5. அக்கினியின் ஊடே நடந்திடும் விக்கினமின்றி நான் துலங்க ஆக்குவார் பொன்னினும் என் விசுவாசம் மிக்கதோர் மகிமையதாய் - கர்த்த
6. சீயோனே உன் பெலன் தரித்திடுவாய் வீற்றிடுவாய் எழுந்து எருசலேமே உன் துயர் நீக்கிடும் இன்ப மணாளன் வந்திடும் வேளையிதே - கர்த்த