கர்த்தரை என்றும் நம்பும்
kartharai endrum nambum
1. கர்த்தரை என்றும் நம்பும் நாம் பாக்கியர் தானே அசையாதிருப்போமே சீயோன் மலை போலே அலைகள் மேல் அலைகள் வந்து மோதி அடித்தாலும் அல்லேலூயா பாடிக் கொண்டே முன்னே செல்லுவோம் - கர்த்தரை
2. இரத்தத்தாலே மீட்கப்பட்ட சுத்த ஜாதியே சுத்த கைகளை நாம் கொட்டி ஸ்துதிப்போமே இயேசுவுக்குள் பூரிப்பாய் மகிழ் கொண்டாடுவோம் பரலோகத்தின் தேவன் நம்மை மீட்டுக்கொண்டாரே -கர்த்தரை
3. இவ்வித சிறப்பைப் பெற்றநாம் மகாத்துமாக்களே தூதர் சேனையே நம்மைச் சூழக் காவலே கர்த்தர் நம் வலப்பக்கமாய் இருப்பதினாலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் நம்மை அசைக்காதே - கர்த்தரை
4. சகோதரர்கள் ஏகமாய்ப் பாடித் துதிப்பது எத்தனை இன்பம் அது என்ன பாக்கியம் பரிசுத்தர்கள் பரனேசுவில் பாடி மகிழ்வது பரலோகமும் குனிந்து பார்க்கும் விந்தைக் காட்சியே -கர்த்தரை
5. இவ்வுலகில் தேவ சமூகம் இவ்விதமென்றால் பரலோக சந்தோஷம் அது என்ன பேரின்பம் அல்லேலூயா தேவ மகிமை நிழல் போல் பார்க்கிறோம் முகமுகமாய்ப் பார்க்கும் காலம் நெருங்கி வருதே - கர்த்தரை
6. எக்காளம் தொனிக்கும் நேரம் மிக சமீபமே தேவ ஜனமே நீ ஆயத்தப்படு தண்ணீரைப் போல் இருதயத்தைத் தாழ்த்தி ஊற்றிடு ஆசீர்வாதம் நிறைவாகவே பெற்று மகிழ்வாய் -கர்த்தரை