கர்த்தரை என் முன்பில்
kartharai en munbil
1 கர்த்தரை என் முன்பில் வைத்ததால் நான் ஒரு போதும் அசைக்கப்படேன் அவர் என் வலப்பக்கம் இருப்பதால் ஒன்றுக்கும் நான் அஞ்சிடேன்
ஆதலால் என் உள்ளமே சதா பூரிப்பாயிற்றே நிதம் நேசரையே துதித்திடுவேன் மகிமையில் அவரைக் கண்டு மகிழ்ந்திடுவேன் அல்லேலூயா பாடிடுவேன்
2 என் வெளிச்சம் இரட்சிப்பவரே யாருக்கும் நான் பயப்படேனே என் ஜீவனின் பெலனானதால் நான் அவரில் மகிழ்ந்திடுவேன்
3 எனக் கெதிராய் சேனை வந்தாலும் திட நம்பிக்கை அவரிடம அவர் மகிமையை பார்க்கும் படியாக ஆலயத்தில் நிலைத்திருப்பேன்
4 கூடாரங்களில் என்னை மறைத்து கன்மலை மேல் உயர்த்திடுவார் பகைஞருக்கு மேலே உயர்ந்து நான் கீர்த்தனங்கள் பாடிடுவேன்
5 சுத்தரோடு கூடவாழவே கர்த்தர் மனதிரங்கினாரே அவர் வருகையில் நித்திய காலமாய் அவரோடு மகிழ்ந்திடுவேன்