கர்த்தராம் இயேசுவின் சிலுவையன்றி
kartharaam yesuvin siluvaiyandri
கர்த்தராம் இயேசுவின் சிலுவையன்றி எதிலும் மேன்மையில்லை கல்மனம் உருக்கும் கல்வாரி கண்டு நன்றியால் துதிக்கிறேன் அன்பின் நாதா எந்தன் ஏசு ராஜா ஆராதனை உமக்காராதனை
1. இயேசுவின் இரத்தம் பாவங்கள் கழுவி முற்றிலும் சுத்தமாக்கும் ஆபேலின் இரத்தம் பேசினதை விட நன்மையைப் பேசும் இரத்தம் உத்தமரே மகா உன்னதரே உந்தன் அன்பு மகா உன்னதமே
2. பொன்னாலும் அல்ல வெள்ளியால் அல்ல இரத்தத்தால் மீட்கப்பட்டோம் செத்த கிரியை முற்றிலும் நீக்கி சுத்தமாய் மாற்றினீரே உம் இரத்தமே மகா புனிதமே ஆராதனை உமக்காராதனை
3. மெய்யாக எந்தன் பாடுகள் ஏற்றீர் நோய்களையும் சுமந்தீர் துக்கங்கள் யாவும் சுமந்து தீர்த்தீர் சாபங்களையும் தீர்த்தீர் கல்வாரியே உம்மை ஆராதிப்பேன் சிலுவையே எந்தன் அன்பின் மேன்மை
4. சொந்தகுமாரன் என்று பாராமல் முற்றிலும் நொறுக்கினீர் அன்பின் பிதாவே உம் அன்பின் நேசத்தை என்னென்று கூறிடுவேன் அன்பின் பிதா எந்தன் நித்திய பிதா ஆராதிப்பேன் நித்ய நித்யமாய்
5. தந்தீரே உந்தன் பரிசுத்த ஆவி ஈந்தீரே உம் அன்பினை தேவன்பின் வெள்ளம் கரைபுரண்டோட என்னையும் நிரப்பினீர் தூயாவியே எந்தன் தேவாவியே தேற்றும் எந்தன் பரிசுத்தாவியே