கர்த்தராம் இயேசு ஆகாய
kartharaam yesu aagaaya
கர்த்தராம் இயேசு ஆகாய மீதினில் சுத்தராம் ஜெயித்தோரை சேர்த்துவிடுவார்
ஆர்ப்பரிப்போம் ! அக மகிழ்வோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் ஆளுகையும் அழியாமையையும் அடைந்து ஆண்டவர் இயேசுவின் வாழ்ந்திடுவோம் அல்லேலூயா ! அல்லேலூயா ! - கர்த்த
1. இருள் மறைந்து பகல் நெருங்கிடுதே மருவினில் நித்திரை தெளிந்திடுவோம் இரட்சிப்பின் பூரண அருகில் வந்திடுதே இரட்சகர் ஒளிதனில் நடந்திடுவோம் - கர்த்த
2. விருதினை பெறவே நியமித்த பாதையில் கிருபையில் நிலைத்துமே ஓடிடுவோம் புரிந்து நற்போரினை விசுவாசம் காத்துமே விரைந்திடுவோம் பொற்கிரீடம் சூடவே - கர்த்த
3. கறைதிரை அறவே சிந்தையில் சுத்தராய் மறைவோமே பரிசுத்தர் இயேசுவே முறைப்படி சித்தமே தேகத்தில் செய்து நாம் திரை ஏகுவோம் விண் மகிமையிலே - கர்த்த
4. கிறிஸ்துவில் மரித்த பரிசுத்தர் மலரும் மரணத்தை ஜெயித்து மே உயிர்த்திடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறுரூபமடைந்தே பறந்திடுவார் - கர்த்த
5. கிருபையில் பிறந்த சீயோனும் சாலேமாய் திருச்சித்தம் செய்து நாம் நிலைத்திடுவோம் கிறிஸ்துவின் நிறைவில் யுகாயுகம் மகிழ்ந்தே கிறிஸ்துவோடாட்சி செய்திடுவோம் - கர்த்த