கர்த்தர் சீயோனிலிருந்து
karthar seeyonilirundhu
கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் மென்மேலும் உன்னை ஆசீர்வதிப்பார்
இந்த ஆண்டு மகிழ்ச்சியின் ஆண்டு இந்த ஆண்டு ஆசீர்வாத ஆண்டு
1. தோல்வி இனி இல்ல பயமும் இனி இல்ல கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே கைகளின் பிரயாசத்தை அனுபவிப்பாய் பாக்கியமும் நன்மையும் பெற்றிடுவாய்
இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே கர்த்தரின் ஆசீர்வாதம் சந்தோஷமே இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே சீயோனின் ஆசீர்வாதம் சந்தோஷமே - இந்த ஆண்டு
2. வருத்தம் இனி இல்ல துக்கமும் இனி இல்ல கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே எருசலேம் வாழ்வை கண்டிடுவாய் இன்னும் அதிகமாய் கண்டிடுவாய்
3. கவலை இனி இல்ல கலக்கமும் இனி இல்ல கர்த்தர் உனக்குள்ளே ஆசீர்வாதமே பிள்ளைகளின் பிள்ளைகளை கண்டிடுவாய் தேவனின் சமாதானம் கண்டிடுவாய்