கர்த்தர் பெரியவர்
karthar periyavar
கர்த்தர் பெரியவர் கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலும் தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகத் துதிக்கப்படத் தக்கவர்
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது அது மகா ராஜாவின் நகரம்
அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாய் அறியப்பட்டுள்ளார் இதோ ராஜாக்கள் கூடிக்கொண்டு ஏகமாய் கடந்து கொண்டு வந்தார்கள்
அவர்கள் அதைக்கண்டபோது பிரமித்து கலங்கி விரைந்தோடினார்கள் அங்கே நடுக்கங்கொண்டு பிரசவவேதனை ஸ்திரீயைப்போல் வேதனைப்பட்டார்கள்
கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர்தாமே உடைக்கின்றீர் நாம் கேள்விப்பட்டபடியே நாம் கண்டோம் தேவனுடைய நகரத்திலே
நமது தேவனின் நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்தை ஸ்திரப்படுத்துவார் என்றென்றைக்குமே தேவன்
தேவனே உம் ஆலயத்தின் நடுவில் உம்முடைய கிருபையை நாங்கள் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் உம் நாமம் விளங்குகிறது
பூமியின் கடைசி பரியந்தமும் உம் புகழ்ச்சி விளங்குகிறது உமது வலது கரம் நீதியால் நிறைந்து இருக்கிறது
உமது நியாயத்தீர்ப்புகளால் சீயோன் பர்வதம் மகிழ்வதாக யூதாவினுடைய குமாரத்திகள் களிகூருவார்களாக
சீயோனைச் சுற்/றிலும் உலாவியும் அதன் கொத்தளங்களை எண்ணுங்கள் அலங்கம் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள் பின்வரும் சந்ததிக்கு சொல்லிட
இந்த யாவே என்றென்றக்குமுள்ள சதா காலங்கள் நமது தேவன் மரணபரியந்தம் நம்மை நடத்துவார் அல்லேலூயா ஆமென்