கர்த்தர் நல்லவர் என்றும் மாறாதவர்
karthar nallavar endrum maaraadhavar
கர்த்தர் நல்லவர் என்றும் மாறாதவர் அவர் வார்த்தை என்றும்முள்ளது கர்த்தர் நல்லவர் அவர் என்றும் மாறாதவர் வானம் பூமி மாறிடலாம்
மலைகள் விலகி தூரம் சென்றாலும் கிருபை விலகாமல் என்னோடிருக்கும்
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே என்னை அழைத்தீர் உம் சேவைக்கு ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே சேவை செய்வேன் ஆயுள்முடியும்வரை
உம்மைப்போல தெய்வம் யாருமில்லையே உம் நாமம் என்றும் வாழ்த்திடுவேன்
உந்தன் வருகையில் என்னை நினைக்கனும் உம்மோடு என்றும் வாழனும் உந்தன் வருகையில் என்னை நினைக்கனும் உம்மோடு பரலோகத்தில்