கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
karthar endhan meyppar
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறைவில்லை பத்திரமாய் என்னைக் காப்பார் அவரின்றி ஒருவரில்லை
பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னை போஷித்து - அமர்ந்த நீருற்றண்டைஅவர் என்னை சேர்ப்பித்து சேதமின்றி ஆத்துமத்தை நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார்
சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே - தேவன் வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே ஜீவ பரன் என்னோடிருப்பார் அவர் தம்கோலும் அவர் தம் தடியும் என்னை தேற்றும்
பகைவர் முன்னே என்னை அவர் மேன்மைப்படுத்தி - நிகரில்லாத தைலம் பூசி என்னை உயர்த்தி சாகும்வரைநன்மை தொடர் ஏக தேவன்வீட்டில் நெடுநாள் நிலைத்திருப்பேன்