கர்த்தர் என் இயேசுவே
karthar en yesuvae
கர்த்தர் என் இயேசுவே ஸ்தோத்திரம் செய்து என்றும் கிருபையால் பருகிடுவோம்
ஆயுட்காலம் வரை துதி பாடிடுவோம் ஆவியால் அபிஷேகித்தார் அன்பரைப் போற்றி கீதங்கள் சாற்றிடவே ஆயிரம் நாவுகள் போதுமோ - கர்த்தர்
ரோகத்தாலே மிக தேகம் வருந்திடுகில் ஏசு வந்தெமதருகினிலே பொற்கரம் நீட்டித் தொட்டவர் ஜீவனையும் அற்புத சுகமும் அளிப்பார் - கர்த்த
திரை போல இப்பாதையின் மறைவிடத்தை விரிவாய் வைத்த கண்ணிகளில் சரிந்து எமது கால்கள் சிக்கிடாதே விரைந்து அவர் காப்பதாலே - கர்த்தர்
பாடி பறந்த நாம் ஆவியில் உயர்ந்திடவே புது பெலன் தந்து நிறைக்கிறாரே ஜீவனுள்ள நற்கற்களாய் இணைந்தவரில் நவ எருசலேமாகிடுவோம் - கர்த்தர்
எண்ணவோ யாருமில்லாத எம்மை யிந்த மண்ணுலகம் தோன்றிடும் சிந்தையில் வரைந்த சீர் பொருந்தியுயர் சீயோனிலே ஆளச்செய்வார் - கர்த்தர்