கர்த்தர் என் வலப்பக்கம்
karthar en valappakkam
கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை
ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும்
பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியே ஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும்
கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர் சிலுவையின் அன்பினால் சிந்தைதாய் கவர்ந்திட்ட இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும்