கர்த்தர் என் பெலன் அவரே என் கோட்டை
karthar en pelan avarae en kottai
கர்த்தர் என் பெலன் அவரே என் கோட்டை ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையுமாம்
பாடுவேன் நான் பாடுவேன் பரிசுத்தர் இயேசுவை புகழுவேன் அகமகிழ்வேன் பொன் இயேசுவின் நாமத்தையே
கர்த்தரை பாடுவேன் வெற்றியும் சிறந்தாரே யுத்தத்தில் வல்லவர் எனக்கவர் நல்லவரே
என் ஆத்துமம் பெலனானவர் என்னை அருமையாய் நேசிப்பவர் கூப்பிட்ட நேரத்திலே கொடுப்பாரே ஆசீர்வாதம்
என் பாவத்தை போக்கினார் என்னை பரிசுத்தம் ஆக்கினார் பரிசுத்த ஆவியினால் புது பெலன் ஈந்தாரே
பாலத்தின் மேல் பலமடைவேன் பரிசுத்தர் வருகை வரை பறப்பேன் கழுகைப் போல பரலோகம் போய் சேருவேன்