கர்த்தர் என் பக்கமாகில்
karthar en pakkamaagil
1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்கு பயம் ஏன்? உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன்; அப்போதென்மேலே வந்த பொல்லா வினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்புபோல ஆம்.
2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே; அதாலே பக்தர் யாரும் திடன்கொள்வார்களே; நான் ஏழைப் பலவீனன், வியாதிப்பட்டோனே; அவரில் சொஸ்தம்இ ஜீவன் சமஸ்தமும் உண்டே.
3. தெய்வாவி என்னில் தங்கி என்னை நடத்தவே, பயம் எல்லாம் அடங்கி திடனாய் மாறுதே; அப்பாவே என்று சொல்ல, அவர் என் நெஞ்சுக்கே ஆற்றல் சகாயம்செய்ய என் ஆவி தேறுதே.
4. என் உள்ளமே களிக்கும் துக்கிக்கவேண்டுமோ? கர்த்தர் என்மேல் உதிக்கும் பகலோன் அல்லவோ? பரத்தில் வைக்கப்பட்ட அநந்த பூரிப்பே என் ஆவிக்கு பலத்த திடன் உண்டாக்குமே.