கர்த்தர் என் ஒளி எனக்கேன் பயம்
karthar en oli enakken payam
1. கர்த்தர் என் ஒளி எனக்கேன் பயம்? ராப்பகலாய் அவர் என்னருகே அவர் என் ரட்சிப்பு பாவத்தினின்று இப்பாக்கியத்தை ஆவி அளிக்கின்றார்.
கர்த்தர் என் ஒளி அவர் என் கீதம் ராப்பகல் என்னை நடத்துகின்றார்.
2. கர்த்தர் என் ஒளி மேகம் தோன்றினும் விஸ்வாசக் கண்ணால் நான் மேல் நோக்குவேன் மகிமை ஆட்சி செய்யும் இடமது இவ்விருள் உலகம் எனக்கு வேண்டாம்.
3. கர்த்தர் என் ஒளி கர்த்தர் என் பெலன் அவர் பெலத்தில் நான் ஜெயம் கொள்வேன் என் பெலவீனம் அவர் மூடுகின்றார் நிமிஷந்தோறும் என்னைத் தாங்குகிறார்.
4. கர்த்தர் என் ஒளி என் எல்லாம் அவர் அவர் பார்வையில் இருளேயில்லை அவர் என் மீட்பர் ரட்சகர் என் ராஜா விண்ணோருடன் நான் அவரைத் துதிப்பேன்.