கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
karthar en nambikkai thurugamaanavar
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் ஆபத்து நாளில் என் அபயமுமாவார்
அல்லேலூயா அல்லேலூயா 4
வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது பாதாளக் கட்டுகள் கழன்று போனது பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே
சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர் சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர் சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே