கர்த்தர் என் மேய்ப்பராய்
karthar en meypparaay
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே நான் தாழ்ச்சி அடைவதில்லை - ஒரு குறைவும் நேர்வதில்லை
1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் - 2 எனது தேவைகள் எல்லாம் அறிவார் ஏற்ற காலத்தில் தந்திடுவார் - 2
அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே கிருபை தங்கிடுதே - 2
உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர் நாமத்தை உயர்த்திடுவேன் - 2 கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம் - 2
2. மரண இருளின் பள்ளதாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே எனது துணையாய் நீரே வருவீர் கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்
ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும் நீதியில் நடத்துகிறார்
3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி பந்தியை ஆயத்தம் செய்திடுவார் தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் - என்னை அழைத்து அபிஷேகம் செய்கின்றார்
பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம் நன்றியால் துதித்திடுதே