கர்த்தர் என் மேய்ப்பரானவர்
karthar en meypparaanavar
1. கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சியடையேன் புல்லுள்ள இடத்தில் மேய்த்து, தண்ணீர் காட்டுகின்றார்.
2. கர்த்தர் என் ஆத்மாவைத் தேற்றி, அவர் நாமத்தினால் என்னை நீதியின் பாதையில் நடத்துகின்றாரே.
3. நான் மரணப் பள்ளத்தாக்கில் செல்ல நேரிட்டாலும், உமது கோலும், தடியும், என்னைத் தேற்றிடுமே.
4. என் சத்துருக்கள் முன்பாக, பந்தி ஆய்த்தமாக்கி, என் தலையை உம் எண்ணெயால் அபிஷேகம் செய்வீர்.
5. என் ஜீவ நாளெல்லாம் நன்மை, கிருபை தொடரும், கர்த்தர் வீட்டில் நித்ய நாளாய், நிலைத்திருப்பேன் நான்.